Sunday, 2 September 2018

மணக்கோலத்தில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனுபாமா!

அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே அனுபாமா நடித்திருந்தாலும் அனைத்து இளைஞர்களின் மனதையும் அவர் வென்றுவிட்டார்.



ப்ரேமம் படத்திற்கு பின்னர் அனுபாமா தமிழில் ஒரு படம் நடித்தார், அந்த படம் தான் கொடி. இந்த படத்திற்கு பிறகு அனுபாமா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம் என்ன என்பது தான் இன்னும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகைகளை போல ஹாட்டாக நடித்தால் படவாய்ப்புகள் தேடிவரும் என்பது ஒரு சிலரின் கருத்தாகவும் உள்ளது. அப்படி நடித்த பல நடிகைகள் இன்று சினிமாவில் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய உண்மை.



அனுபமா தனது ட்விட்டர் கணக்கில் அடிக்கடி புகைப்படங்கள் அல்லது கருத்துக்களை பதிவிடுவார். சமீபத்தில் அனுபாமா மணக்கோலத்தில் ஒரு சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். அதிலும் செல்ஃபி எடுக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது என்றே கூறலாம்.


மேலும் இதுபோன்ற தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் பெற நமது கணக்கை பின்தொடருங்கள். இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி...!

Saturday, 1 September 2018

இன்றைய இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா!

சூர்யா இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக தொண்டுகளை செய்து வருகிறார். அதனாலேயே சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகம். சூர்யா சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.


தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் சமூகத்தில் உள்ள பிரச்சனை பற்றி பேசுவார் சூர்யா. ஒரு சில படங்கள் முழுக்க முழுக்க அதனை பற்றியே இருந்துள்ளன. பல பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட சமூக அக்கறையுடன் நிறைய விஷயங்களை பேசியுள்ளார்.

சூர்யா சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இளைனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அது என்னவென்றால், "சமூகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அதனை பிரதிபலிக்க அல்லது பெரும்பாலான மக்களிடம் கொன்று செல்ல சினிமா எனும் ஊடகம் உள்ளது. அதனை இன்றைய இளைஞர் பயன்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.



இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் இதுபோன்ற தகவல்கள் செய்திகளை தெரிந்துகொள்ள நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!

ஓ.பி.ஸ். சொன்னதை கேட்டு வயிறு குலுங்க சிரித்த பொதுமக்கள்!

ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருக்கிறார். இவர் இதற்கு முன் சில முறை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் பல முறை நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டிருக்கிறார். அதற்கு பல விதமான காரணங்களும் உண்டு.



ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சரான பன்னீர்செல்வம் ஒரு சில காரணங்களால் பதவி இழந்து பின் இப்போது துணை முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் துணைமுதல்வர் ஓ.பி.ஸ். ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

"நான் முதலமைச்சராக இருந்து வர்தா புயலை விரட்டியடித்ததற்கு பிறகு தமிழகத்திற்கு எந்தப் புயலும் வரத் தயங்குகிறது" என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை கேட்ட பொதுமக்கள் சிலர் கேளிக்கையாக எடுத்துக்கொண்டுள்ளார். என்னதான் கேளிக்கை என்றாலும் அவர் கூறியது ஒரு வகையில் சரிதான். ஏனென்றால் அதற்கு பின்னர் எந்த புயலும் தமிழகத்திற்கு வரவில்லை.



மேலும் இதுபோன்ற தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் பெற நமது கணக்கை பின்தொடருங்கள். இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி...!

சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயுடன் நடனமாடிய முருகதாஸ்!

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் சர்கார். இதற்கு முன் வெளிவந்த கத்தி, துப்பாக்கி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமும் வெற்றி அடையும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதாலேயே மேலும் எதிர்பார்ப்புகள் எழும்புகிறது. இந்த படத்தில் கோட் அணிந்துகொண்டிருப்பது தான் விஜயின் தோற்றம். விஜய் பார்ப்பதற்கு செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்றே சொல்லலாம்.

சர்கார் படக்குழு அவ்வப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் விஜயும் முருகதாசும் நடனமாடுவது போல் இருக்கின்றனர். இதனை வைத்து பார்க்கும்போது முருகதாஸ் இந்த படத்தில் நடமாடுவாரா என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. பார்ப்போம் காத்திருந்து.


இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில். தெரிவியுங்கள். மேலும் இதுபோதுன்ற தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!

Friday, 31 August 2018

+1 மற்றும் +2 வகுப்புகளில் தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்!

தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்கள் இப்போது அதிகமாக மாறிவருகிறது. மாறுகிறது என்பதை விட முன்னேறுகிறது என்றே கூறலாம். இதுவரை இருக்கும் நமது படத்திட்டங்களில் பல விஷயங்கள் இருந்தாலும் அவை பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இல்லை. இப்போது வெளிவந்திருக்கும் தகவல் பல வகையில் உதவும்படி இருக்கிறது.


அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறார். உதாரணத்திற்கு சொன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான சீருடை. இதுபோன்ற பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டுவரும் செங்கோட்டையன் ஒரு படி மேலே சென்று இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் "+1 மற்றும் +2 வகுப்புகளில் பேஷன் டெக்னாலஜி, டூரிசம் போன்ற தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான அடுத்தகட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இன்னும் எந்த மாதிரியான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மாணவர்களுக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற நடவெடிக்கைகளை வரவேற்பது நமது கடமை.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதனை பற்றிய கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!

Shalini Pandey open talk about her debut!

எல்லா வேலையும் முடிச்சிட்டு இந்த நடிகை சொல்லும் காரணத்தை பாருங்கள்!

நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர். இந்த படம் தெலுங்கில் வெளிவந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது, மற்றும் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டேவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியினால் விஜய் தேவர்கொண்டா தமிழில் நோட்டா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நடிக்க ஷாலினி பாண்டேவிற்கு வாய்ப்பு வந்தது.

அர்ஜுன் ரெட்டி படத்தை பற்றி ஷாலினி பாண்டேவிடம் கேட்ட போது அவர் கூறியதை பாருங்கள். அர்ஜுன் ரெட்டி எனக்கு மறக்க முடியாத படம், இந்த படத்தில் நடிக்க நான் மிகவும் வேதனையை அனுபவித்தேன் என்றார்.மேலும் நான் இரண்டு பேரை இதற்கு முன் காதலித்தேன், ஆனால் இரண்டு காதலும் நிலைக்கவில்லை, அர்ஜுன் ரெட்டி படத்தில் நெருக்கமான காதல் கட்சியில் நடிக்கும்போது எனக்கு பழைய காதல் நினைவுகள் வந்தது, இருந்தாலும் படத்திற்காக அந்த வேதனையை தாங்கிக்கொண்டு நடித்தேன் என்றார்.

நான் சினிமாவில் நடிக்கவந்ததே ஒரு பெரிய போராட்டம். என் பெற்றோர்கள் நான் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பேச்சையும் மீறி நான் அவர்களுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். வெளியே வந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தேன் படம் வெற்றி அடையவே என பெற்றோர் என்னை மீண்டும் ஏற்றுக்கொண்டனர் என்றார்.

Saturday, 26 May 2018

How to make Tandoori Chicken?

Tandoori Chicken


Tandoori chicken is a traditional Indian dish full of spicy flavors! To make a tasty dish, we need 30 minutes marinade and a few minutes on the grill only.

INGREDIENTS

  • 4 Boneless skinless chicken breasts

Marinade

  • 1 tablespoon lemon juice
  • 1/2 cup plain yogurt
  • 1 tablespoon minced garlic
  • 1 tablespoon onion powder
  • 1 tablespoon cilantro leaves
  • 1 tablespoon garam masala
  • 1 tablespoon paprika
  • 1 teaspoon cumin
  • 1 teaspoon coriander
  • 1/2 teaspoon ginger
  • 1/4 teaspoon cayenne pepper

INSTRUCTIONS

  • Whisk together all marinade ingredients. Place marinade in a large zip lock bag and add chicken breasts. Allow to marinate at least overnight or atleast 30 minutes.
  • Remove chicken from bag and discard marinade. Cook chicken on the grill over medium heat 5-6 minutes on each side or until cooked through.
  • Suggested serving options: Cooked rice, lime rice wedges for drizzling, extra cilantro, Indian flatbread (naan) and Mango chutney.

Notes

Coriander and garam masala are spices you can find at most markets.

I hope you like this article. If you want to way anything, just leave it in comment. Follow me for more cooking tips. Thank you...!

மணக்கோலத்தில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனுபாமா!

அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும...