Friday, 31 August 2018

+1 மற்றும் +2 வகுப்புகளில் தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்!

தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்கள் இப்போது அதிகமாக மாறிவருகிறது. மாறுகிறது என்பதை விட முன்னேறுகிறது என்றே கூறலாம். இதுவரை இருக்கும் நமது படத்திட்டங்களில் பல விஷயங்கள் இருந்தாலும் அவை பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இல்லை. இப்போது வெளிவந்திருக்கும் தகவல் பல வகையில் உதவும்படி இருக்கிறது.


அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறார். உதாரணத்திற்கு சொன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான சீருடை. இதுபோன்ற பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டுவரும் செங்கோட்டையன் ஒரு படி மேலே சென்று இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் "+1 மற்றும் +2 வகுப்புகளில் பேஷன் டெக்னாலஜி, டூரிசம் போன்ற தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான அடுத்தகட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இன்னும் எந்த மாதிரியான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மாணவர்களுக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற நடவெடிக்கைகளை வரவேற்பது நமது கடமை.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதனை பற்றிய கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!

No comments:

Post a Comment

மணக்கோலத்தில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனுபாமா!

அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும...