Friday, 31 August 2018

+1 மற்றும் +2 வகுப்புகளில் தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்!

தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்கள் இப்போது அதிகமாக மாறிவருகிறது. மாறுகிறது என்பதை விட முன்னேறுகிறது என்றே கூறலாம். இதுவரை இருக்கும் நமது படத்திட்டங்களில் பல விஷயங்கள் இருந்தாலும் அவை பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இல்லை. இப்போது வெளிவந்திருக்கும் தகவல் பல வகையில் உதவும்படி இருக்கிறது.


அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் படிப்பு சார்ந்த விஷயங்களில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறார். உதாரணத்திற்கு சொன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான சீருடை. இதுபோன்ற பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டுவரும் செங்கோட்டையன் ஒரு படி மேலே சென்று இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் "+1 மற்றும் +2 வகுப்புகளில் பேஷன் டெக்னாலஜி, டூரிசம் போன்ற தொழில் சார்ந்த பாடங்கள் இனி நடத்தப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான அடுத்தகட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இன்னும் எந்த மாதிரியான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மாணவர்களுக்கு நன்மை சேர்க்கும் இதுபோன்ற நடவெடிக்கைகளை வரவேற்பது நமது கடமை.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதனை பற்றிய கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!

Shalini Pandey open talk about her debut!

எல்லா வேலையும் முடிச்சிட்டு இந்த நடிகை சொல்லும் காரணத்தை பாருங்கள்!

நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர். இந்த படம் தெலுங்கில் வெளிவந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது, மற்றும் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டேவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியினால் விஜய் தேவர்கொண்டா தமிழில் நோட்டா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் நடிக்க ஷாலினி பாண்டேவிற்கு வாய்ப்பு வந்தது.

அர்ஜுன் ரெட்டி படத்தை பற்றி ஷாலினி பாண்டேவிடம் கேட்ட போது அவர் கூறியதை பாருங்கள். அர்ஜுன் ரெட்டி எனக்கு மறக்க முடியாத படம், இந்த படத்தில் நடிக்க நான் மிகவும் வேதனையை அனுபவித்தேன் என்றார்.மேலும் நான் இரண்டு பேரை இதற்கு முன் காதலித்தேன், ஆனால் இரண்டு காதலும் நிலைக்கவில்லை, அர்ஜுன் ரெட்டி படத்தில் நெருக்கமான காதல் கட்சியில் நடிக்கும்போது எனக்கு பழைய காதல் நினைவுகள் வந்தது, இருந்தாலும் படத்திற்காக அந்த வேதனையை தாங்கிக்கொண்டு நடித்தேன் என்றார்.

நான் சினிமாவில் நடிக்கவந்ததே ஒரு பெரிய போராட்டம். என் பெற்றோர்கள் நான் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பேச்சையும் மீறி நான் அவர்களுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். வெளியே வந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தேன் படம் வெற்றி அடையவே என பெற்றோர் என்னை மீண்டும் ஏற்றுக்கொண்டனர் என்றார்.

மணக்கோலத்தில் செல்ஃபி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த அனுபாமா!

அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானவர். ப்ரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டும...